இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் செயற்குழு கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. ஜமாஅத் தலைவர் எம்.எஸ் முஹமது யூனுஸ்
விடுப்பில் இருக்கும் காரணத்தால் தற்காலிகத் தலைவர் இஸ்ஹாக் மரைக்காயர் தலைமையில் இச்செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய விசயமாக எதிர் வரும் ஜமாஅத் தேர்தலில் வெளிநாட்டு வாழ் பரங்கிப்டைவாசிகளுக்கு ஓட்டுரிமை வழங்குவது பற்றி பேசப்பட்டது.
அதன்படி, வெளிநாட்டுவாழ் பரங்கிப்பேட்டைவாசிகள் ஜமாஅத் தேர்தலின் போது, வெளிநாட்டில் இருக்கும் பட்சத்தில் அவர்கள் ஓட்டளிக்கும் முறை மற்றும் அதன் சாத்தியக்கூறுகள் பற்றி முடிவெடுக்க ஓய்வுபெற்ற வருவாய்த் துறை அதிகாரி ஓ. முஹமது கவுஸ் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்ட்டது.
ஐவர் குழு விபரம்:
ஓ. முஹமது கவுஸ்
என். முஹமது ஷஃபி
எல். ஹமீது மரைக்காயர்
ஹெச் .அலி அப்பாஸ்
எஸ். செய்யது சாகுல் ஹமீது
வெளிநாட்டு வாழ் பரங்கிப்பேட்டை வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கை இந்த முறை நிறைவேற்றும் விதமாக இந்த ஐவர் குழு அமையப்பெற்றுள்ளது.
நன்றி: Mypno
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக