ஞாயிறு, டிசம்பர் 18, 2011

சென்னையில் அன்னா ஹசாரேவுக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தது ஏன்?

சென்னை வந்த சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 


லோக்பால் பற்றி உரையாற்ற அன்னா ஹசாரே இன்று (18.12.2011)  சென்னை வந்துள்ளார்.  விமான
நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து பெ.தி.க,   மே -17 இயக்கம்,  மக்கள் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் ஹசாரே வருகைக்கு  எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக்கொடி காட்டின. 


ஜனநாயகத்துக்கு எதிராக ஹசாரே செயல்படுகிறார்.   அதனால்தான் அவருக்கு கறுப்புக்கொடி காட்டுகிறோம்
என்று கூறின இந்த அமைப்பினர்.     

மேலும்,  அன்னா ஹசாரே இந்தியைத்தவர வேறு மொழியில் பேசுவதில்லை என்று பெரியார் திராவிட
கழகத்தினர் குற்றம் சாட்டியது. 

இந்தி வெறியரான ஹசாரே பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை எதிர்த்து
வருபவர்  என்றும் குற்றம் சாட்டினர்.

கறுப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தவர்களை  கைது செய்தது போலீஸ்.

கருத்துகள் இல்லை: