பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அதிகாரிகள் அலட்சியத்தால் தானே புயலால் பாதிக்கப்பட்டவர் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் தானே
புயலால் அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
குறிப்பாக பரங்கிப்பேட்டை அன்னங்கோயில், புதுக்குப்பம், புதுப்பேட்டை, சாமியார்பேட்டை, ஆரியநாட்டு கிழக்குத்தெரு, சின்னூர் பகுதிகளில் மீனவர்களின் படகுகள், வலைகள், குடிசை வீடுகள் மற்றும் கிராமங்களில் உள்ள குடிசை வீடுகள் அனைத்தும் சேதமடைந்துள்ளன.
தானே புயல் முன்னெச்சரிக்கையாக கடற்கரையோரம் குடிசை வீடுகளில் இருந்தவர்கள் புயல் பாதுகாப்பு மையம், அரசு பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு ரேஷன் கடையில் இருந்து அரிசி வழங்கி சமையல் செய்து கொடுக்க வருவாய்துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். ஆனால் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் இதுவரை எந்த பகுதிக்கும் அரிசி வழங்கப்படாததால் புயலால் பாதித்தவர்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஒரு சில பகுதிகளில் ஊராட்சி தலைவர்களும், தன்னார்வ தொண்டர்கள் சொந்த செலவில் உணவு சமைத்து கொடுத்து வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக