பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அநியாயமாக கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில
பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில்தள்ளுபடிச் செய்யப்பட்டது.
கர்நாடகா மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்தததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் மஃதனி. நீதிபதிகளான பி.சதாசிவம், ஜெ.செலமேஷ்வர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் மஃதனியின் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்தது. மஃதனிக்கு உயர் சிகிட்சை அளிக்கவேண்டும் எனவும், வழக்கின் விசாரணையை விரைவாக முடிக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.அப்துல் நாஸர் மஃதனிக்காக வழக்கறிஞர்கள் சுசில்குமார், ஜெ.எல்.குப்தா,
அடோல்ஃப் மேத்யூ ஆகியோர் ஆஜராகினர்.
அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்காமல் வழக்கை வேண்டுமென்றே நீட்டிக்கொண்டு செல்வதாகவும், ஏராளமான உடல்நல கோளாருகளைக் கொண்ட மஃதனிக்கு ஜாமீன் அனுமதிக்க வேண்டும் என்றும் அவருடைய வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் வாதிட்டனர்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவ்வழக்கின் 31-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள மஃதனி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில் பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையை நவம்பர் 23-ஆம் தேதிக்கு பிறகு கடந்த திங்கள் கிழமை மூன்றாவது தடவையாகவும் நீதிமன்றம் ஒத்திவைத்தது. மாநில அரசு அரசு தரப்பு வழக்கறிஞரை நியமிக்காமல் விசாரணையை நடத்த இயலாது என சிறப்பு விரைவு நீதிமன்ற நீதிபதி ஹெச்.ஆர்.ஸ்ரீனிவாஸ் வழக்கை ஜனவரி 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
கடந்த நவம்பர் 8-ஆம் தேதி அரசு தரப்பு வழக்கறிஞர் உடல்நிலைக் காரணமாக இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இரண்டு மாதங்கள் ஆனபிறகும் இதுவரை இவ்வழக்கில் புதிய அரசு தரப்பு வழக்கறிஞர் நியமிக்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக