நீண்ட காலமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் 1000 முஸ்லிம் கிராமங்களில் பள்ளிக்கூடங்கள் இல்லை என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
நேசனல் கவுன்சில் ஆஃப் அப்ளைட் எக்கணாமிக் ரிசர்ச்சின் முதன்மை அதிகாரி அபூ ஸலாஹ் ஷெரீஃப் நடத்திய ஆய்வில் மேற்கு வங்காள முஸ்லிம்களின் அவலநிலை சுட்டிக் காட்டப்படுகிறது.
3000 கிராமங்களில் ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் கிடையாது. முஸ்லிம் கிராமங்களில் சமூக சூழல்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
முஸ்லிம் கிராமங்களை மையமாகக் கொண்ட பேருந்து நிறுத்தங்கள் இல்லை. முஸ்லிம்களின் வறுமை மாநிலத்தின் சராசரியை விட உயர்ந்த நிலையில் உள்ளது. இதர மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் அதிகமாக வறுமையில் உழலும் முஸ்லிம் கிராமங்களைக் கொண்ட மாநிலம் மேற்கு வங்காளமாகும்.
சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த மாணவர்களின் கல்வி உதவித் தொகை திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாநிலமும் மேற்கு வங்காளம்தான்.
மேற்குவங்காளத்தில் மிகவும் அதிகமான வழிப்பறிக் கொள்ளைகளால் பாதிக்கப்படுவதும் முஸ்லிம்களாவர். நகரங்களில் வழிப்பறி மற்றும் திருட்டினால் பாதிக்கப்படும் முஸ்லிம்களின் சதவீதம் 36 ஆகும்.
நகரங்களில் 35 சதவீத முஸ்லிம் பெண்கள் கொடுமைகளுக்கு ஆளாகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக