திங்கள், மார்ச் 21, 2011

விஜயகாந்துக்கு எதிராக நடிகர் வடிவேலு தமிழகம் முழுவதும் பிரச்சாரம்

விஜயகாந்த் - வடிவேலு மோதல் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை.    புகைந்துகொண்டுதான் இருக்கிறது.


விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன் என்று வடிவேலு முன்பு அறிவித்திருந்தார்.   அந்த முடிவில் இப்போது கொஞ்சல் மாறுதல்.



விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம் செய்யவிருக்கிறார்.   வரும் 23ம் தேதி முதல் அவர் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்.

பொதுவாக திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்.  குறிப்பாக தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து அக்கட்சியை தோற்கடிக்க சபதம் ஏற்றுள்ளார்.


இதையடுத்து நடிகர் வடிவேலு இன்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.

கருத்துகள் இல்லை: