வியாழன், மார்ச் 24, 2011

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கவேண்டும்: முலாயம் சிங் கோரிக்கை

நாடாளுமன்றத்திலும்,சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு தனி இடஒதுக்கீடு தேவை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து,இன்று மக்களவையில் விவாத நேரத்தின்போது அவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் பேசுகையில்;”மக்களவையில் முஸ்லீம் உறுப்பினர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. முக்கியமான 14 மாநிலங்கள் சார்பாக மக்களவைக்கு 257 எம்.பி.,க்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லீம்.
ஆகவே இந்த நிலை மாற வேண்டுமானால்,மக்களவையிலும்,மாநில சட்டப்பேரவைகளிலும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு கொண்டுவர வேண்டும்.” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: