உலகிலேயே ஊழல்கள் அதிகமாக நடைபெறும் நாடு எது? என்பதுக் குறித்து அறிவதற்காக 16 நாடுகளில் நடத்தப்பட்ட சர்வேயில் இந்தியாவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.
ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் வர்த்தக கன்ஸல்டன்ஸி நிறுவனமான பொலிடிக்கல் அண்ட் எக்கனாமிக் ரிஸ்க் கன்ஸ்லடன்ஸி லிமிடட், மிகச்சிறந்த ஊழல் நாடு எது? என்பதுக் குறித்த ஆய்வை மேற்கொண்டது.
10-இல் 8.67 புள்ளிகளைப் பெற்று இந்தியா நான்காவது இடத்தை பிடித்தது. 9.27 புள்ளிகளை பெற்று கம்போடியா முதலிடத்தை பிடித்துள்ளது. 9.25 புள்ளிகளை பெற்று இந்தோனேஷியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. 8.9 புள்ளிகளைப் பெற்று பிலிப்பைன்ஸ் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. வியட்நாம்(8.3 புள்ளிகள்), சீனா(7.93 புள்ளிகள்), தாய்லாந்து(7.55 புள்ளிகள்), ஹாங்காங்(1.10 புள்ளிகள்), ஆஸ்திரேலியா(1.39 புள்ளிகள்), ஜப்பான்(1.90 புள்ளிகள்), அமெரிக்கா(2.39 புள்ளிகள்) பெற்றுள்ளன.
சிங்கப்பூர் 0.37 புள்ளிகளை பெற்று கடைசி இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவுக்கு நான்காவது இடம்தானே என சிலர் திருப்தி அடையலாம். 2ஜி ஸ்பெக்டரம் ஊழலை கவனிக்காமல் விட்டார்களோ என்னவோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக