வெள்ளி, மார்ச் 25, 2011

வடிவேலு உங்களை தாக்கி பேசியிருக்கிறாரே? விஜயகாந்த் பதில்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் 24.03.2011 அன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு விஜயகாந்த் பதில் அளித்தார்.

கேள்வி:  வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?
பதில்:  சூப்பராக இருக்கிறது. எனக்கு எந்த பயமும் இல்லை.

கேள்வி: அ.தி.மு.க., கூட்டணி வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
பதில்: பிரகாசமாக உள்ளது. எங்கள் கூட்டணி வெற்றி கூட்டணி; அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். தேர்தலை பார்த்து எங்களுக்கு பயமில்லை.
கேள்வி: ரிஷிவந்தியத்தை ஏன் தேர்வு செய்தீர்கள்?


கேள்வி: வடிவேலு உங்களை பற்றி தனிப்பட்ட முறையில் தாக்கி பேசியிருக்கிறாரே?
பதில்:  அதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை. என்னை பற்றி மக்களுக்கு தெரியும் என்றார்.




பதில்: தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் போக விருப்பம். எல்லா தொகுதிகளிலும் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளனர். அவர்களுக்காக முதலில் பணியாற்ற தற்போது ரிஷிவந்தியத்தை தேர்வு செய்துள்ளேன். தொடர்ந்து பல இடங்களில் போட்டியிட்டு பணியாற்றுவேன்.

கருத்துகள் இல்லை: