சனி, மார்ச் 26, 2011

காஸ்ஸாவின் மீதான தடையை ராணுவம் முடிவுக்குக்கொண்டுவரவேண்டும்-இஃவானுல் முஸ்லிமீன் கோரிக்கை


காஸ்ஸாவின் மீதான தடையை முடிவுக்குக்கொண்டுவர எகிப்தின் உயர் ராணுவ கவுன்சில் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென அந்நாட்டின் முக்கிய எதிர்கட்சியான இஃவானுல் முஸ்லிமீன் வலியுறுத்தியுள்ளது.மக்கள் விருப்பவாக்கெடுப்பை மதித்து புரட்சிக்கு ஆதரவளித்த ராணுவம் காஸ்ஸா விவகாரத்திலும், எகிப்து மக்களின் விருப்பத்திற்கிணங்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென இஃவானுல் முஸ்லிமீனின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

காஸ்ஸா மக்களின் உயிரை ஆபத்திற்குள்ளாக்கும் தடையை முடிவுக்குக்கொண்டுவர
அனைத்து அரபு நாடுகளும் தங்களது நிலைப்பாட்டை விளக்கவேண்டும்.காஸ்ஸாவிலுள்ள மக்களை இஸ்ரேல் ராணுவம் கொன்றொழிக்கும்பொழுது மெளனம் சாதித்த ஹுஸ்னி முபாரக்கின் யுகம் முடிந்துவிட்டது.காஸ்ஸாவிலுள்ள மக்களுக்கு உதவுவதற்கான வாய்ப்பு எனவும் இஃவானுல் முஸ்லிமீன் தெரிவித்துள்ளது.காஸ்ஸாவின் மீது தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் நிறுத்தவேண்டுமென எகிப்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் நபீல் அல் அரபி வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: