சனி, மார்ச் 26, 2011

அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்துவோம்-சிரியா

 

தரா நகரத்தில் நடந்த மோதலில் நூற்றுக்குமேற்பட்ட மக்கள் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்டதைத்தொடர்ந்து சிரியாவில் மக்கள் எழுச்சி கிளர்ந்தெழுந்துள்ள சூழலில் அரசியல் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.1963-ஆம் ஆண்டுமுதல் அமுலில் உள்ள அவசரச்சட்டத்தைக்குறித்து ஆராய்வோம் என அரசு உறுதியளித்துள்ளது.தராவில் கூட்டுப்படுகொலை நடத்தியவர்களை சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம்.கைதுச்செய்யப்பட்டவர்களை விடுவிக்க அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் உத்தரவிட்டுள்ளார்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த
அரசு உத்தரவிடவில்லை எனவும், வெளியிலுள்ள சக்திகள் தாக்குதலுக்கு பின்னணியிலிருப்பதாகவும் அதிபரின் செய்தித்தொடர்பாளர் பவ்த்தானியா ஷாபான் தெரிவித்துள்ளார்.மக்களின் கோரிக்கையை பரிசீலிக்க குழு உருவாக்கப்படும்.தொழிலாளிகளின் சம்பளத்தை உயர்த்துவதற்கும், சுகாதாரத்துறையில் சீர்திருத்தங்கள் கொண்டுவரவும் அரசு தயார் என அவர் தெரிவித்துள்ளார்.தேர்தலில் மேலும் அதிகமான கட்சிகள் போட்டியிட அனுமதி வழங்கப்படும்.ஊடகங்கள் மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.ஊழலுக்கெதிராக நடவடிக்கை மேற்கொள்ள சிறப்புக்குழு உருவாக்கப்படும் எனவும் ஷாபான் தெரிவித்தார்.

ஆனால், 2005-ஆம் ஆண்டிலும் இதே அறிக்கைகளை அரசு வெளியிட்டதாகவும், ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை என எதிர்ப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.வாக்குறுதிகளல்ல, நடவடிக்கைகள்தாம் முக்கியம் என அவர்கள் கூறுகின்றனர்.

முக்கிய பத்திரிகையாளர் மாஸன் தர்விஷ், எழுத்தாளர் லுஅரி ஹுஸைன் உள்ளிட்டவர்களை விடுதலைச்செய்துள்ளதாக சிரியா ஹியூமன் ரைட்ஸ் லீக் தலைவர் அப்துல்கரீம் ரிஹாவி தெரிவித்துள்ளார்.

நேற்று சிரியாவில் மஸ்ஜிதுகளில் போராட்டத்தை வலுப்படுத்த அழைப்புவிடுக்கப்பட்டது.தராவில் நேற்று தொழுகைக்குப்பிறகு முன்னாள் அதிபர் ஹஃபருல் ஆஸாதின் சிலையை தீவைத்துக்கொளுத்த முயன்ற எதிர்ப்பாளர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.தெற்கு நகரத்தில் பலத்த துப்பாக்கிச்சத்தம் கேட்டதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.டமாஸ்கஸ், ஹமா, தால் ஆகிய இடங்களில் நேற்று பிரம்மாண்டமான பேரணிகள் நடத்தப்பட்டன.ஏராளமானோர் கைதுச்செய்யப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: