வீழ்ச்சியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் இஸ்ரேலை பாதுகாப்பதற்காக ஈரானுக்கும்,அரபு நாடுகளுக்கும் இடையே மோதலை உருவாக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கெதிராக ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் மேற்கு நகரமான கெர்மார்ஷாஹில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு பேசிய நஜாத், அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளுக்கெதிராக ஆவேசமாக உரை நிகழ்த்தினார்.
வீழ்ச்சியை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் இஸ்ரேலை மரணத்திலிருந்து காப்பாற்ற ஒரு சக்தியாலும் இயலாது. அடிமைத்தனம், காலனியாதிக்கம், கொள்ளையடித்தல் ஆகியவற்றின் காலக்கட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. ஈரானை விழுங்கிவிடலாம் என மோகிக்கும் இத்தகைய சக்திகளின் விருப்பத்திற்கு பதிலடிக் கொடுக்கும் விதமாக அயல் நாடுகளுடன் ஈரானியர் தோளோடு தோள் சேர்ந்து செயல்பட வேண்டுமென நஜாத் அழைப்பு விடுத்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக