காஸ்ஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய இரண்டு வெவ்வேறான தாக்குதல்களில் ஐந்து ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். நேற்று காலை கான் யூனுஸ் நகரத்தில் நடந்த விமானத் தாக்குதலில் இரண்டுபேர் இறந்துள்ளனர்.
ரஃபாவில் நடந்த இன்னொரு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டதாக பிரஸ் டி.வி தெரிவிக்கிறது. ரஃபாவில் நடந்த ஏவுகணைத் தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.இத்துடன் இரண்டு தினங்களிடையே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
ஹமாஸின் ராணுவ பிரிவான இஸ்ஸத்தீன் அல் கஸ்ஸாம் போராளிகள் இருவரை கான் யூனுஸில் இஸ்ரேல் கொலை செய்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஹமாஸ் போர் நிறுத்தத்திற்கு தயார் என அறிவித்ததற்கு பிறகு இஸ்ரேல் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
கடந்த வியாழக்கிழமை காஸ்ஸா முனையில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் ஐந்து பேர் மரணித்தனர். ஏராளமானோர் கடுமையாக காயமடைந்தனர்.தங்களுடைய போர் விமானங்களும், தரைப்படையினரும் காஸ்ஸாவை இலக்காக கொண்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவ வட்டாரங்கள் மிரட்டல் விடுத்துள்ளன.
2008 டிசம்பர் மற்றும் 2009 ஜனவரி இஸ்ரேல் ராணுவம் நடத்திய தொடர் தாக்குதலில் பெண்களும், குழந்தைகளும் உள்பட 1400 பேர் கொல்லப்பட்டனர்.காஸ்ஸாவின் மீது கடுமையான தடையை ஏற்படுத்திய பிறகு இஸ்ரேல் இத்தாக்குதலை நடத்தியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக