சனி, ஏப்ரல் 02, 2011

சீனா,ரஷ்யாவிற்கு எதிராக இந்தியாவை உபயோகிக்க அமெரிக்கா திட்டம்


ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக இந்தியாவில் சர்வதேச ஏவுகணை தடுப்பு கட்டகத்தை துவங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்திகளின் அடிப்படையில் பிரபல ரஷ்ய பத்திரிகையான  Komsomoloskaya Pravda கடந்த வியாழக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
ஐரோப்பாவுடன் மட்டுமின்றி ரஷ்யாவின் எல்லையையொட்டிய இந்தியாவிலும், ஜப்பானிலும் ஒருங்கிணந்த ஏவுகண தடுப்பு கட்டகத்தை நிர்மாணிக்க இந்நாடுகளுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அப்பத்திரிகை கூறுகிறது.
ரஷ்யாவை சுற்றிலும் கயிறை இறுக்குவதற்காக ரஷ்யாவிற்கு அருகிலுள்ள நாடுகளுடன் ஏவுகணை தடுப்பு கட்டகம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக அப்பத்திரிகை கூறுகிறது.

2007 ஆம் ஆண்டு சீனாவில் ஹார்பினில் நடந்த இந்தியா-ரஷ்யா-சீனா ஒருங்கிணந்த மாநாட்டில் அமெரிக்காவுடனான ஏவுகணை தடுப்பு ஒத்துழைப்பை அன்றைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி நிராகரித்துவிட்டார் என இந்திய பத்திரிகைகள் இட்டுக்கட்டி செய்தியை வெளியிட்டதாகவும், இது மூடப்பட்ட அத்தியாயம் இல்லை எனவும் டெல்லி அமெரிக்க தூதரக அதிகாரிகள் வாஷிங்டனுக்கு அனுப்பிய கம்பிவடத் தகவல்களை வெளியிட்ட விக்கிலீக்ஸ் செய்திகளை  மேற்கோள்காட்டி ரஷ்ய பத்திரிகை கூறுகிறது.

கருத்துகள் இல்லை: