சனி, ஏப்ரல் 02, 2011

சாதிக் பாட்ஷாவின் மரணம்:சி.பி.ஐ விசாரிக்கும்


:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் மர்ம மரணத்தைக் குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தும்.
உச்சநீதிமன்றம் நீதிபதிகளான ஜி.எஸ்.சிங்வி,எ.கெ.கங்கூலி ஆகியோரடங்கிய பெஞ்சு முன்பாக சி.பி.ஐ இவ்வழக்கை விசாரிக்க சம்மதித்துள்ளது.
கடந்த மாதம் 16-ஆம் தேதி சென்னையில் தனது வீட்டில் சாதிக் பாட்ஷா தூக்கில் தொங்கி மரணித்த நிலையில் காணப்பட்டார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தனது பங்கினைக் குறித்த செய்திகளை எதிர்கொள்ள தன்னால் இயலவில்லை என சாதிக் பாட்ஷா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
சாதிக் பாட்ஷாவின் மரணத்தைக் குறித்து சி.பி.ஐ விசாரிக்க முன்னர் தமிழ் நாடு அரசும் கோரியிருந்தது. சி.பி.ஐ
விசாரணைக்காக அறிக்கை(notification) வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றம்  கூடுதல் சோலிஸிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங்கிடம் வலியுறுத்தியது.
2-ஜி வழக்கு விசாரணைக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் யு.யு.லலித் அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐக்காக ஆஜரான கெ.கெ.வேணுகோபால் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: