இந்தியாவின் பிக்காஸோ என அழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற ஓவியரான எம்.எஃப்.ஹுஸைன் தான் மரணிக்கும் முன்பு தனது ஓவியங்களை தீவைத்து கொளுத்த கூறியதாக அவருடைய மகன் உவைஸ் தெரிவித்துள்ளார்.
ஓவியங்களை பாதுகாக்கும் வழக்கம் ஹுஸைனுக்கு கிடையாது. அவ்வாறு பாதுகாக்கவும் அவருக்கு விருப்பமில்லை. ஏன் ஓவியங்களை தீவைத்துகொளுத்த வேண்டும் என எம்.எஃப்.ஹுஸைனிடம் மகன் கேட்ட பொழுது அதற்கு ஹுஸைன், ’அதை வைத்து என்ன செய்ய?’ என கேள்வி எழுப்பினார் என உவைஸ் கூறுகிறார். விசித்திரமான இந்த ஓவியரின் விசித்திரமான ஆர்வத்தை நடைமுறைப்படுத்தியிருந்தார் பிரபல கலைஞனின் மகாகாவியங்களான ஓவியங்கள் வரலாற்றிலிருந்து மாய்ந்து போயிருக்கும்.
கடந்த மாதம் மரணித்த எம்.எஃப்.ஹுஸைனை நினைவுக்கூறும் நிகழ்ச்சி ஒன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் எம்.எஃப்.ஹுஸைனின் இரண்டு சகோதரர்களும், மகன் உவைஸும் கலந்து கொண்டனர்.
திரைப்பட இயக்குநராகவும் செயல்படும் உவைஸ் தனது தந்தையை குறித்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளார். கஜகாமினி என்ற திரைப்படத்தை எம்.எஃப்.ஹுஸைன் இயக்கிய பொழுது அவருக்கு உதவியாளராக உவைஸ் பணியாற்றினார். தந்தையை குறித்து ’லெட்டர்ஸ் டூ மை சன் எபவுட் மை பாதர்’ என்ற ஆவணப்படத்தை தயாரித்து வருகிறார் உவைஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக