துருக்கியில் குர்து எதிர்ப்பாளர்கள் நடத்திய தாக்குதலில் எட்டு துருக்கி ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.ஈராக்கின் எல்லையை யொட்டிய ஹகாரி மாகாணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ராணுவத்தினரின் வாகனம் கடந்து செல்லும் வேளையில் கண்ணிவெடிக்குண்டு வெடித்து சிதறியது. இதனைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நிகழ்ந்துள்ளது.
குர்திஸ்தான் வர்க்கர்ஸ் பார்டி(பி.கே.கே) இத்தாக்குதலை நடத்தியதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்மத் இல்மாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இப்பகுதியில் ஜூலை மாதத்திற்கு பிறகு ஏராளமான தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதியில் கூடுதல் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக