செவ்வாய், ஆகஸ்ட் 16, 2011

சுதந்திர தினத்தில் நெல்லை மாவட்டத்தை பீதி வயப்படுத்திய போலீஸார்

தமிழகத்தின் தென் மாவட்டமான நெல்லையில் சுதந்திர தினத்தில் மக்கள் நிம்மதியை கெடுக்கும் வகையில் 3 ஆயிரம் போலீசாரை குவித்து பீதிவயப்படுத்தியது தமிழக காவல்துறை.
நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் பாப்புலர் ஃப்ர்ண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சுதந்திர தின
அணிவகுப்பு நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து கடைசிவரை இழுத்தடித்துவிட்டு பின்னர் அனுமதி மறுத்தனர் காவல்துறையினர்.
இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் அணிவகுப்பு நிகழ்ச்சியை ரத்துச்செய்தது. எனினும் அணிவகுப்பு நடக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்ட மேலப்பாளையம் பகுதியில் தென் மாவட்டங்களை சேர்ந்த 3 ஆயிரம் போலீசார் நேற்றுமுன்தினம் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். வெளியூர்களில் இருந்து மேலப்பாளையத்திற்கு வரும் அனைத்து ரோடுகளிலும் பேரிக்கார்டு அமைத்து உதவி கமிஷனர்கள் தலைமையில் வாகன சோதனை மும்முரமாக நடந்தது.
நேற்று இரண்டாம் நாளாக மாநகர போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ மேற்பார்வையில் மேலப்பாளையத்தில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். செக்போஸ்ட்களில் வாகன சோதனை மும்முரமாக நடந்தது. ரயில்வே ஸ்டேஷன்கள், பஸ்ஸ்டாண்ட்கள், லாட்ஜ்களில் தீவிர சோதனை நடந்தது. இவ்வாறு சுதந்திர தினத்தன்று தேவையற்ற பதட்டத்தை உருவாக்கி மக்களின் நிம்மதியை கெடுத்துள்ளது தமிழக காவல்துறை.

கருத்துகள் இல்லை: