பதினான்கு வருட ஆயுள் தண்டனை கைதியான முன்னாள் காவலர் அப்துல் காதர் 21 வருடங்களுக்கு மேல் ஆகியும் சிறையில் வாடி கொண்டிருக்கிறார். இவர் கடந்த 1990 ஆம் வருடம் டிசம்பர் 12 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் அவர் தன்னுடைய ஆயுள் தண்டனையான 14 வருடம் முடிந்த நிலையிலும் இன்னும் விடுதலை செய்யப்படாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கடந்த மூன்று வருடங்களாக ரமலான், பக்ரித் போன்ற மிக முக்கியமான பண்டிகைகளுக்கு கூட பரோலில் வர இவருக்கு அனுமதி மறுக்கப்படுவது வேதனைக்குரியது.
மேலும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவருடைய தாய் இறந்த காரணத்தால் இவருக்கு 7 நாள் பரோல் கிடைத்தது. இவர் தன்னுடைய தண்டனைக்காலம் முடிந்த பிறகும் சிறையில் உள்ளார். சிறையின் அறிக்கைப்படி சிறையில் இவர் நடத்தையும் நன்றாக உள்ளதாக தெரிவிக்கின்றது. மேலும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நேய் போன்றவைகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும் இவருடைய மகள்களுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என்பதால் இவருடைய குடும்பத்தார் இவருடைய விடுதலைக்காக தினமும் பிரார்த்தித்த வண்ணமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக