2003-ஆம் ஆண்டு காஸ்ஸா முனையில் இஸ்ரேல் ராணுவம் புல்டோஸரை ஏற்றி கொலைச் செய்த அமெரிக்க தன்னார்வ தொண்டரின் பெயரை ஈரானில் உள்ள தெரு ஒன்றிற்கு சூட்ட அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.
இஸ்ரேலின் கொடூரத்திற்கு பலியான ரேய்ச்சல் அலீன் கோரியின் பெயரில் இனி நகரின் மத்திய பகுதி அழைக்கப்படும் என டெஹ்ரான் முனிசிபல் குழுவை மேற்கோள்காட்டி ஹம்ஸஹ்ரி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நகரத்தில் ரேய்ச்சல் அலீன் கோரி தெரு என்ற பலகை உடனடியாக மாட்டப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஃபலஸ்தீனர்களின் வீடுகளை இடிப்பதற்கு இஸ்ரேலி ராணுவத்தினரின் முயற்சியை தடுப்பதற்கு முயலும் வேளையில் 23 வயதான கோரி கொலைச் செய்யப்பட்டார்.
1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு பிறகு முதன்முறையாக அமெரிக்க குடிமகன் ஒருவரின் பெயர் ஈரான் தெருவுக்கு சூட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஈரானில் இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு அமெரிக்காவின் கைப்பாவையான ஷா பஹ்லவியின் பதவி காலத்தில் அமெரிக்காவின் அதிபர்களான ஜான் எஃப்.கென்னடி, பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ட்விட் ஐஸனோவர் ஆகியோரின் பெயர்கள் டெஹ்ரானின் தெருக்களுக்கு சூட்டப்பட்டன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக