உச்சநீதிமன்றத்தின் இரண்டாவது பெண் நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ரஞ்சனா தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார். கியான் சுதா மிஷ்ரா என்பவர்தாம் உச்சநீதிமன்றத்தில் பணியாற்றும் ஒரே பெண் நீதிபதியாவார்.
ரஞ்சனா தேசாயின் நியமனத்திற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா தலைமையிலான உயர்மட்டக்குழு (collegium) அங்கீகாரம் அளித்துள்ளது. இவர்களுடன் குஜராத் உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி எஸ்.ஜெ.முகோபாத்யாயா, கர்நாடாகா உயர்நீதிமன்ற முதன்மை நீதிபதி ஜெ.எஸ்.கஹார் ஆகியோரின் நியமனத்திற்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1998-ஆம் ஆண்டு ரஞ்சனா தேசாய் மும்பை உயர்நீதிமன்றத்தில் நிரந்தர நீதிபதியாக பதவியேற்றார். தற்போது 28 நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தில் உள்ளனர். இவர்களில் 6 பேர் இரண்டு மாதத்திற்குள் ஓய்வு பெறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக