திங்கள், செப்டம்பர் 05, 2011

புவனகிரி பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் துர்நாற்றம்

புவனகிரி பேரூராட்சி பகுதியில் குடிநீர் குழாயில் கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். புவனகிரி பேரூராட்சியில் 9வது வார்டிற்குட்பட்ட முத்தாட்சி பிள்ளையார் கோவில் முகப்பில் உள்ள காய்கறி மார்கெட் சந்து மற்றும் சந்தைத்தோப்பு மசூதி அருகிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு குடிநீர் பைப்புகள்
போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள், வியாபாரிகள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக இந்த பகுதி குடிநீர் குழாயில் வரும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் குடிநீர் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வசதி படைத்தவர்கள் காசு கொடுத்து சுவையான குடிநீர் கேன்களை வாங்கி பயன்படுத்தும் நிலையில் ஏழை மக்கள் குடிநீருக்காக அலைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட வார்டு கவுன்சிலர் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

source: Dinamalar

கருத்துகள் இல்லை: