ஞாயிறு, செப்டம்பர் 04, 2011

அதிமுக-வினர் விருப்பமனு: செல்வி ராமஜெயம் தொடங்கி வைத்தார்


உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுபவர்களுக்கு விருப்பமனு அளிக்கும் நிகழ்ச்சியை அதிமுக மாவட்ட மகளிரணிச் செயலரும், சமூக நலததுறை அமைச்சருமான செல்வி ராமஜெயம் சிதம்பரம் கீழ ரதவீதியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலரும், முன்னாள் எம்எல்ஏ-வுமான ஏ. அருண்மொழிதேவன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் தோப்பு கே. சுந்தர் வரவேற்றார். மாவட்ட பேரவைச் செயலர் வி.கே. மாரிமுத்து, முன்னாள் நகரமன்றத் தலைவர் எம்.எஸ்.என். குமார், மாவட்ட இலக்கிய அணி செயலர் சி. ஜவகர், தலைமைக்கழக பேச்சாளர் தில்லைகோபி, குமராட்சி ஒன்றியச் செயலாளர் கே.ஏ. பாண்டியன், கிள்ளை காத்தவராயசாமி, நிர்வாகிகள் சி.கே. சுரேஷ்பாபு, டேங்க் ஆர். சண்முகம், மருதவாணன், பன்னீர்செல்வம், பொன்னையன், குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குடிமைப்பொருள் குற்ற தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் நியமனம்
சிதம்பரம், செப். 3: கடலூர் மாவட்ட குடிமைப் பொருள் குற்றத் தடுப்பு காவல் பிரிவு இன்ஸ்பெக்டராக இ. அம்பேத்கர் (படம்) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தஞ்சை மாவட்ட குடிமைப் பொருள் குற்றத்தடுப்பு பிரிவிலிருந்து மாறுதலாகி கடலூருக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: