திருக்குர்ஆன் எரிப்பு விவகாரத்தில் ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கமான விஷ்வஹிந்து பரிஷத்தை சேர்ந்த ராபின் ஷர்மாவின் சகோதரன் தீபக் ஷர்மா கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, குற்றம்சாட்டப்பட்ட ஷாஹின் சைபிக்கு ஆயுள் தண்டனைஅளிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரித்த டெல்லி கூடுதல் நீதிபதி கவுஷிக், வழக்கை அரிதான ஒன்றாக ஏற்க மறுத்துவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவருக்கு ரூபாய் 10,000/- அபராதமும் விதித்தார்.
முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜரான ராபின் ஷர்மா, தான் 2003-ம் ஆண்டு வரை விஷ்வ ஹிந்து பரிஷத்தில் இருந்ததாகவும், 2001-ம் ஆண்டு தான் திருக்குர்ஆனை எரித்தாக தன் மேல் பொய் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மார்ச் 2, 2005 அன்று இருச்சக்கர வாகனத்தில் மர்ம நபர்கள் என் கடைமுன் கூடியதையடுத்து, கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றபோது சகோதரன் தீபக்ஷர்மா கொலை செய்யப்பட்டு கிடந்ததாக தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக