வியாழன், செப்டம்பர் 22, 2011

தமிழக உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு – இரண்டு கட்டங்களாக வாக்குப் பதிவு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 17ம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவும், 19ம் தேதி 2வது கட்ட வாக்குப் பதிவும்  என இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

திருச்சி மாநகராட்சியுடன், திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புக்காக தேர்தல் ஆணையம் காத்திருந்தது. நேற்று முற்பகலில் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து மாலையில் தேர்தல் தேதியை அறிவித்தார் மாநில தேர்தல் ஆணையர் சோ. அய்யர்.
இதுகுறித்து அவர் கூறுகையில்; ‘தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி மற்றும் 19-ந் தேதி ஆகிய நாட்களில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் 22-ந் தேதி தொடங்குகிறது. வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 29-ந் தேதி.
வேட்பு மனுக்களின் மீதான பரிசீலனை மறுநாள் 30-ந் தேதி நடைபெறும். வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 3-ந் தேதி கடைசி நாள்.
முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 17-ந் தேதியும், இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு 19-ந் தேதியும் நடைபெறும்.
திருச்சி தவிர மற்ற 9 மாநகராட்சிகளுக்கும் அக்டோபர் 17ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும். திருச்சிக்குப் பின்னர் தேர்தல் நடத்தப்படும்.
2 கட்ட தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் 21-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்

கருத்துகள் இல்லை: