லோக்பால் வரைவுக் குழுவில் சிறுபான்மையினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆகியோரையும் சேர்க்கவேண்டும் என்று அனைத்து இந்திய
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் கூட்டுக்குழு கடந்த செவ்வாய்யன்று கோரிக்கை விடுத்துள்ளது.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் கூட்டுக்குழு கடந்த செவ்வாய்யன்று கோரிக்கை விடுத்துள்ளது.
அக்குழுவின் தலைவர் உதித் ராஜ் கூறுகையில்; ‘அரசு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரையும் மற்றும் சிறுபான்மையினரையும் லோக்பால் குழுவில் மட்டுமல்லாது லோக்பால் உறுப்பினர்கள் தேர்வுக் குழுவிலும் இடம்பெறச் செய்ய வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.
வருகின்ற சனிக்கிழமை அன்று ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் தன்னுடைய பதிப்பை பாராளமன்ற தேர்வுக் குழுவிடம் அளிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். லோக்பால் வரையறைக்குள் தனியார் நிறுவனங்களும் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மேலும் ராஜ் கூறுகையில்; ‘இச்சமூகங்களுக்கு ஏராளமான நிதி ஒதுக்கப்படுவதாகவும் அது ஊழல் மற்றும் தவறாக பயன்படுத்துதல் ஆகிய செயல்களால் பயனின்றி போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக