ஆஃப்கன் அமைதிக் குழுவின் தலைவரும் முன்னாள் ஆஃப்கன் அதிபருமான ஃபுர்கானுதீன் ரப்பானி தற்கொலைப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக
தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலிபான் குழுக்களுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த போது தலையில் அணிந்திருந்த டர்பனில் மறைத்து வைத்திருந்த வெடிமருந்தை வெடிக்கச் செய்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாக்குதலில் ஐந்து மூத்த ஆஃப்கன் அதிகாரிகளும் கொல்லப்பட்டனர்.
கடந்த செவ்வாயன்று அமைதிக்கான உயர் கூட்டுக்குழுவின் தலைவர் மாசூம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்த சூழ்நிலையில் இத்தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆஃப்கன் அதிபர் ஹமீத் கர்சாய் ஐக்கிய நாடுகள் சபையின் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக