வியாழன், செப்டம்பர் 22, 2011

டாக்டர் நூர் முஹமது பேரூராட்சி தலைவர் போட்டிக்கு விருப்பமனு

நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக உள்ளாட்சித் தேர்தல் பணிகள் சூடு பிடித்து வருகிறது. இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அறிவித்தே விட்டது. பரங்கிப்பேட்டை நிலவரத்தை பொருத்த வரையில், அ.தி.மு.க. சார்பில் மலை மோகன் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தி.மு.க.வில் இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் பேரூராட்சித் தலைவருக்கு போட்டியிட, டாக்டர் நூர் முஹமது தனது விருப்ப மனுவை அளித்துள்ளார். அவருடன், காங்கிரஸ் சார்பில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிடவும் சிலர் விருப்ப மனு அளித்துள்ளனர்.
அதன்படி, 1-வது வார்டில் போட்டியிட நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹா. செய்யது அலி, 5-வது வார்டில் போட்டியிட நகர ராகுல் காந்தி பேரவையின் பலாசுளை சேட்டு (எ) முஹமத யூசுப், 9-வது வார்டில் ஹபீபுன்னிசா, 2-வது வார்டில் ஜூனைதுல் ஹாஜிரா ஆகியோர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

1-வது வார்டு : நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹா. செய்யது அலி



5-வது வார்டு: நகர ராகுல் காந்தி பேரவையின் பலாசுளை சேட்டு (எ) முஹமத யூசுப்



2-வது வார்டு: ஜூனைதுல் ஹாஜிரா



9-வது வார்டு : ஹபீபுன்னிசா

2 கருத்துகள்:

MYPNO FAN சொன்னது…

U SIMPLY COPYING ALL NEWS FROM MYPNO SITE. BUT DONT QUOTE THANKS MYPNO. GREAT COPY CAT U ARE.

Ali சொன்னது…

we are not copy all news from mypno, Did you find all news copy from mypno? but we copied some news from there? we think did not big matter to copy from any other blogs. In future if we copy any news from mypno, we will fullfill your desire

Rgds
emparangipettai.blogspot.com