ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு நீதி கேட்டு முஸ்லிம்களும் சமூக ஆர்வலர்களும் போராடிவரும் நிலையில் தற்போது மேலும் அதுபோன்று ஒரு சம்பவம் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிஜேபி ஆளும் உத்தரகான்ட் மாநிலம் ருத்ராபூர் நகரில் நடந்தேறியுள்ளது. இச்சம்பவத்தில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளனர் மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். இதனால் நகர் முழுவதும் பதற்றம் நீடிக்கிறது.
ருத்ராபூர் உத்தரகான்ட் மாநிலம் உதம்சிங் மாவட்டத்தில் உள்ள ருத்ராபூர் நகர் கடந்த பல வருடங்களாக அமைதியாக இருந்து வந்தது.ஆனால் கடந்த ஒரு வருடமாக சில ஹிந்துத்வா வாதிகளால் அங்கு கலவரங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி விஷமிகள் சிலர் ஒரு பையில் புனித குர்ஆன் பிரதியையும் பன்றி இறைச்சியையும் வைத்து அருகில் இருந்த கோயிலுக்குள் வீசிவிட்டு சென்றுள்ளனர். இதை அறிந்த அப்பகுதி முஸ்லிம்கள் குர்ஆனை அவமதித்தவர்களை கைது செய்யக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையும் குற்றவாளிகளை கைது செய்வதாக கூறி அனுப்பியுள்ளனர்.
ஆனால் இரண்டு நாட்கள் கடந்தும் குர்ஆனை அவ்மதித்தவர்களின் மீது எந்தவித நடவடிக்கையும் காவல்துறை எடுக்கவில்லை. அக்டோபர் 2 ஆம் தேதி அப்பகுதியில் மீண்டும் இதே போன்றதொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. சில ஹிந்து சமூகத்தினர் குர்ஆனை அவமதித்ததுடன் எரித்தும் விட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த முஸ்லிம் சமூகத்தினர் உடனடியாக நடவடிக்கை எடுக்ககோரி காவல்நிலையம் சென்றனர். ஆனால் அப்போதும் காவல்துறை நடவடிக்கை மேற்கொள்ளாததால் முஸ்லிம்கள் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லிம்களை கலைந்து செல்லுமாறு காவல்துறையினர் மிரட்டினர். ஆனால் அவர்கள் ‘குர்ஆனை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கலைந்து செல்ல மாட்டோம்’ என்றனர். இதனால் கோபமுற்ற காவல்துறை அவர்களை லத்தியால் அடித்ததால் பலர் படுகாயம் அடைந்தனர். இதனால் ஆத்திரம் கொண்ட முஸ்லிம் மக்கள் எதிர்ப்பில் இறங்கியுள்ளனர். இதனையே சாக்காக வைத்து முஸ்லிம்கள் மீது காவல்துறை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.இதில் 4 முஸ்லிம்கள் உயிர் இழந்துள்ளனர். மேலும் இந்த பிரச்சினையை பயன்படுத்திக் கொண்டு சில ஹிந்துதுவவாதிகள் முஸ்லிம்களின் கடைகளை அடித்து, நொறுக்கி சேதபடுத்தியும், வாகனங்களை தீ வைத்து கொழுத்தியும் உள்ளனர் என்று சம்பவத்தை நேரில் கண்ட பாதிக்கப்பட்ட பகுதியில் மருத்துவமனை வைத்திருக்கும் திரு.ஷா ஜிலானி என்பவர் தெரிவித்தார்.
மேலும் ஜிலானி கூறியதாவது; ‘போலிஸ் துப்பாக்கி சூடு நடத்தி கொண்டிருக்கும்போது ஹிந்து சமூகத்தை சேர்ந்த குண்டர்கள் முஸ்லிம் கடைகளை சூறையாடியதுடன் வாகனங்களுக்கும் தீ வைத்துக் கொளுத்தினர். கடைத் தெருவில் உள்ள எந்த முஸ்லிம்களின் கடைகளும் மிஞ்சவில்லை அனைத்தும் சூறையாடப் பட்டதுடன் தீக்கு இரையாகின.’ என்றார்.
இச்சம்பவம் குறித்து ஜம்மியத் உலமா ஏ ஹிந்த் அமைப்பின் உதம்சிங் மாவட்டத்தின் கிளை செயலாளர் அப்துல் காதிர் தெரிவிக்கையில்; ‘போலிஸ் துப்பாக்கி சூட்டில் 4 முஸ்லிம்கள் கொல்லப்பட்டது மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் முஸ்லிம்கள் பெரும் அளவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.இதனால் அப்பகுதி முஸ்லிம்கள் பீதி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் கடந்த ஆண்டும் இது போன்று சம்பவம் நிகழ்ந்துள்ளதாகவும் தெரவித்தார். ஹிந்து அமைப்பினர் சிலர் சாமா மஸ்ஜித் மீது பன்றியின் இறைச்சியை எறிந்தனர் என்றும் அது தொடர்பாக காவல்துறை சிலரை கைதுசெய்து சிறையில் அடைத்தனர் பின்பு எந்த தண்டனையும் இல்லாமல் குற்றவாளிகள் வெளியே விடப்பட்டனர்’ என்றும் கூறினார்.
கடந்த 2000 ஆம் ஆண்டு உத்தரபிரதேச மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்ட உத்தரகான்ட் மாநிலத்தை பிஜேபி ஆண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக