திங்கள், அக்டோபர் 03, 2011

கிள்ளையில் அம்மனா? அவ்லியாவா?

அம்மன் கோயில் கட்டி வழிப்படும் முஸ்லீம் தம்பதிகள் என்ற தலைப்பிட்டு சமீபத்தில் சில ஊடகங்களில் புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகி இருந்தன.


கிள்ளையில் மேல்படி சம்பவம் நடந்துள்ளது அம்மனுக்கு கோயில் கட்டி அதற்கு '''மஹா மாரியம்மன் ஆலயம்'' என்றுப் பெயரிட்டு தீப ஆராதனை ஏற்றி வேத மந்திரங்களை புர்கா அணிந்த பஷீரா என்ற முஸ்லிம் பெண்ணே ஓதி காலை, மாலை பூஜை நடத்தி வருவதாகவும் அதற்கு அவரது கணவர் ஜின்னா முழு ஆதரவு அளித்து வருவதாகவும் அதை ஏராளமான பக்த, பக்தையர்கள் அம்மனை தரிசித்துவிட்டு செல்கின்றனர் என்று தொடருகிறது அந்த செய்தி.

உருவ வழிப்பாட்டை ஒழித்துக்கட்டிய இஸ்லாமிய மார்க்கத்தில் பிறந்து வளர்ந்த நீங்கள் அம்மனுக்கு கோயில் கட்டி வழிப்பாடு செய்வதற்கு எது காரணமாக இருந்தது என்று நிருபர் கேட்க? பத்து வருடங்களுக்கு முன் மாரியாத்தா எனது கணவில் தோன்றி தனக்கு கோயில் கட்டி வழிபடச் சொன்னதாக மிகவும் பக்தி பரவசத்துடன் பதில் கூறினாராம் பஷீரா.

பஷீராவின் கணவில் அம்மன் தோன்றியது உண்மை என்றால் பஷீரா வாழும் காலத்தில் அம்மனை பலத் தடவை நேரில் சந்தித்துப் பேசி இருக்க வேண்டும். அம்மனை இவர் நேரில் பார்த்ததில்லை அம்மன் இன்ன வடிவில்தான் இருப்பார் என்றும் இவருக்குத் தெரியாது இவரல்லாமல் அம்மனுக்கு கோவில் கட்டி அன்றிலிருந்து இன்றுவரை வழிப்படும் ஹிந்துக்களிலும் எவரும் அம்மனை நேரில் பார்த்தவர்கள் கிடையாது.

கிள்ளையில் அல்லது பக்கத்து ஊரில் உள்ள அம்மன் சிலையை பஷீரா அடிக்கடிப் பார்த்திருக்கலாம். அம்மனின் கற்சிலை பஷீராவின் கணவில் காட்சி அளித்திருக்கலாம். பன்றிகள் அதிகம் மேயும் வழியாக போய் வரும் நிலை முஸ்லீம் ஒருவருக்கு ஏற்பட்டால் அவரது கணவில் பன்றிகள் காட்சி அளிக்கவேச் செய்யும் பன்றிகளை கணவில் கண்டதற்காக அதை அவர் ஹலாலாக்கிக் கொள்ள முடியுமா?


இணை வைப்பாளர் ஷேக் அப்துல்லாஹ் ஜமாலியின் இணைவைப்பு பிரச்சாரம் சமீப காலமாக சூடு பிடித்திருப்பதால் அது பஷீராவின் மனதில் மாற்றத்தை எற்படுத்தி இருக்கலாம். பஷீரா ஜின்னா தம்பதிகள் வசிக்கும் பகுதியில் ஹிந்துக்கள் அதிகம் என்பதால் அங்கே தர்ஹா கட்டினால் கல்லா (உண்டியல்) நிறையாது என்றுக் கருதி கோயிலைக்கட்டி வசூலை முடுக்கி விட்டிருக்கலாம்;

காரணம் கணவில் தோன்றி ஆலயம் அமைக்கக் கூறியதாக கரடி விடுவதெல்லாம் மற்ற மதத்தவர்களை விட நம்மவர்களிடம் அதிகம் இருப்பதை எவரும் மறுக்க முடியாது. தமிழகத்தின் தர்ஹாக்களின் வரலாறுகளில் 100 சதவிகிதம் பஷீரா விடும் கணவு புருடாவாகவே இருக்கும்.

கருத்துகள் இல்லை: