புதன், அக்டோபர் 05, 2011

பரங்கிபேட்டை பாஷையில் குறள்களுக்கு உரை! - பகுதி - 5

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
 தாமே தமியர் உணல்
 ஹவா நஃப்ஸ் புடிச்சு நாம தனியா உக்காந்து வயித்துலே கொட்டிக்கிறது, மிஸ்கீன்
மாதிரி மத்தஹக்கிட்டே காசுபணம் கேக்குறதை விட மோசம்.

விருப்புஅறாச் சுற்றம் இயையின், அருப்புஅறா
ஆக்கம் பலவும் தரும்
 ஒருத்தஹலுக்கு மொஹபத் காட்டுற சொந்தக்காரஹ மட்டும் அமைஞ்சிட்டாஹனா, அந்த சீதேவிக்கு நெறஞ்ச பரக்கத்தையும், நீடிச்ச ஸலாமத்தையும் கொடுக்கும்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை: