சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவிக்கு 8 பேரும், 33 வார்டு உறுப்பினர்களுக்கு 214 பேரும் போட்டியிடுகின்றனர் என தேர்தல் நடத்தும் அலுவலர் பெ.மாரியப்பன் தெரிவித்தார்.
சிதம்பரம் நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட மொத்தம் 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் அதிமுக மாற்று வேட்பாளர் எஸ்.சரஸ்வதி, தேமுதிக வேட்பாளர் வி.மங்கையர்கரசி ஆகிய இருவர் திங்கள்கிழமை வாபஸ் பெற்றனர். இதில் 8 வேட்பாளர்கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நகராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள்:
எஸ்.நிர்மலா (அதிமுக), செ.எழில்மதி (திமுக), ஹெச்.பௌஜியாபேகம் (மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சி), எஸ்.செந்தில்வள்ளி (காங்கிரஸ்), எஸ்.நாகவல்லி (பாமக), சு.தனலட்சுமி (விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), கே.ஜெயலட்சுமி (மதிமுக), எம்.மாலா (சுயேச்சை). 33 வார்டு உறுப்பினர்களுக்கு மொத்தம் 270 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதில் 56 வேட்பாளர்கள் திங்கள்கிழமை வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். ஆதலால் 33 வார்டுகளுக்கு மொத்தம் 214 பேர் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக