இதய நோய், சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்று நோயால் பாதிக்கப்பட்ட, முற்றும் கல்வி கற்காத எண்பத்தைந்து வயது மூதாட்டி குர்- ஆனில் ஐந்தில் ஒரு பங்கை மனனம் செய்துள்ளார் என்று சவுதியின் தினசரி பத்திரிக்கையான கல்ப் கிங்டம் தெரிவித்துள்ளது.
அவர் சில மாதங்களாக குர்-ஆன் மனனம் செய்யும் வகுப்பிற்கு சென்று வருவதோடு, அவர் ஒரு நாள் கூட வகுப்பிற்கு விடுப்பு எடுத்ததில்லை என்றும், அவர் வசிக்கும் இடத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள சவுதியின் மத்திய பகுதியில் உள்ள ஷக்ரா என்னுமிடத்திற்கு அவர் தினந்தோறும் வந்து போவதாக சப்க் அரபி மொழி பள்ளி தெரிவித்துள்ளது.
மேலும் இந்த வயது முதிர்ந்த பருவத்தில் பல நோய்களுடன் அவதிப்படும் இந்த மூதாட்டி ஒரு நாள்கூட விடுப்பு எடுக்காமல் வகுப்பிற்கு வருகிறார் என்று அங்குள்ள ஆசிரியர்கள் ஆச்சர்யத்தை தெரிவித்துள்ளனர்.
குர்-ஆனின் 114 –சூராக்களில் அவர் இது வரை 20-சூராக்களை மனனம் செய்துள்ளார் என்றும், கல்வி கற்க இதுவரை பள்ளியை அடைந்திடாத இந்த மூதாட்டிக்கு எவ்வாறு குர்-ஆன் மட்டும் படிக்க வருகிறது என்றால் அது எல்லாம் வல்ல இறைவனின் அதிசயம் மட்டுமே என்று குர்-ஆன் மனன வகுப்பின் ஆசிரியர் தெரிவித்துள்ளதாகவும் ஊடக அறிக்கை தெரிவிக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக