தமிழக உள்ளாட்சித் தேர்தலின் 2-ம் கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது. பரங்கிப்பேட்டை பேரூராட்சி தேர்தல் வாக்குப்பதிவும் இன்று காலை 7மணிமுதல் நடைபெற்று வருகிறது. காலை
8 மணிக்கு பிறகு வாக்குப்பதிவு விறுவிறுவென்று நடைபெற்ற வருகின்றது. வழக்கம் போல் ஆண்களைவிட பெண்கள் அதிக ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் நின்று தமது வாக்கப்பதிவினை செலுத்தி வருகின்றனர்.
வாக்காளர்கள், கட்சி உறுப்பினர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் ஆதரவாளர்கள், முகவர்கள் என்று பலர் வாக்குச் சாவடிகளை சுற்றி சுற்றி வருவதினால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறாத வண்ணம் காவல்துறை செயல்பட்டுவருகிறது.
Source: Mypno
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக