பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தேர்தல் காரணமாக கடந்த இரு வாரங்களாக நிலவி வந்த அணல் பிரச்சாரம் நேற்று மாலை 5 மணியுடன் ஓய்ந்தது. பேரூராட்சி தலைவர் வேட்பாளர்கள் மற்றும் வார்டு உறுப்பினர் வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்து வந்தனர். நாளை பரங்கிப்பேட்டை உள்ளிட்ட, தமிழகம் முழுக்க 2-ம் கட்ட உள்ளாட்சி தேர்தலின் வாக்கு பதிவு நடைபெற உள்ளது.
பேரூராட்சி மன்றத் தலைவருக்கு ஆறு வேட்பாளர்கள் போட்டியிட்டாலும், தி.மு.க. சார்பில் போட்டியிடும் எம்.எஸ். முஹமது யூனுஸ், அ.தி.மு.க. வேட்பாளர் க.மாரிமுத்து, சுயேட்சை வேட்பாளர் ஆர். ஜெகநாதன் ஆகிய மூவரிடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது. இந்த மூவரில் வெற்றியை பெறுவது யார் என்கிற போட்டி நிலவி வருகிறது.
நாளை தேர்தல் நடைபெற இருப்பதால், வாக்குச் சாவடிகள் அனைத்தும் பாதுகாப்பு வளையத்துக்குள் வந்துவிட்து. இதனால் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பரங்கிப்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியின் மொத்த வாக்களர்கள் எண்ணிக்கை 15,783 ஆகும். இதில் 7,722 ஆண் வாக்காளர்களும் 8,061 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக