ஞாயிறு, அக்டோபர் 23, 2011

தமிழகம்:முதல் தேர்தலில் செல்வாக்கை நிரூபித்த எஸ்.டி.பி.ஐ

சென்னை:தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல்களுக்கு நடந்த தேர்தலில் முதன்முதலாக போட்டியிட்ட சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப்
இந்தியா கட்சி கடுமையான போட்டிகளை ஏற்படுத்தி பலரையும் ஆச்சரியமடைய வைத்துள்ளது.

மாநகராட்சி,நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி வார்டுகளில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிப்பெற்றுள்ள இக்கட்சி போட்டியிட்ட பல இடங்களிலும் அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.க வேட்பாளர்களுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. பல இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ பெற்ற வாக்குகள் எதிர்வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நிர்ணயித்துள்ளது.
இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் எஸ்.டி.பி.ஐ வெற்றிப்பெற்ற இடங்கள் பின்வருமாறு:

மாநகராட்சி வார்டுகள்:கோயம்புத்தூர் மாநகராட்சியில் 82-வது வார்டில் முஹம்மது ஸாலிம்.

திருநெல்வேலி மாநகராட்சியில் 36-வது வார்டில் எஸ்.மொய்தீன் ஃபாத்திமா
நகராட்சி வார்டுகள்:கடையநல்லூர் நகராட்சியில் 29-வது வார்டில் நைனா முஹம்மது கனி.

செங்கோட்டை நகராட்சியில் 21-வார்டில் செய்யத் ஷாகுல் ஹமீத் பாதுஷா.
பேரூராட்சி வார்டுகள்:திருநெல்வேலி பத்தமடை 4-வது வார்டு, புலாங்குடியிருப்பு 12-வது வார்டு, கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோடு 9, 13, 14, 15 வார்டுகள், திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை 8-வது வார்டு மற்றும் 9-வது வார்டு
மேலும் ஊராட்சிகளில் பல்வேறு வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ வெற்றிப்பெற்றுள்ளது.

சென்னை மேயர் பதவிக்கு போட்டியிட்ட அமீர் ஹம்ஸா 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். ஈரோட்டில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட யூனுஸ் 5 ஆயிரம் வாக்குகளை பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை: