உச்சநீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து சங்க்பரிவார தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கஷ்மீர் குறித்த தனது கருத்தில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியதாவது: ‘எதிர்பாரதவிதமாக அவர்கள் என்னை தாக்கினார்கள். இத்தகைய பாசிச அணுகுமுறைகளை தடைச்செய்ய வேண்டும். கஷ்மீரில் மக்களின் விருப்பவாக்கெடுப்பு நடத்தவேண்டும் என்ற எனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்.
கஷ்மீரில் மக்கள் விருப்ப வாக்கெடுப்பு நடத்தப்படும் என ஜவஹர்லால் நேரு ஐ.நாவில் வாக்குறுதியளித்துள்ளார். இந்தியாவின் முதல் பிரதமரின் நிலைப்பாட்டிற்கு ஒப்பான நிலைப்பாடுதான் என்னுடையது. இதனை எவ்வாறு தேசத் துரோகம் எனவும், தேசத்திற்கு விரோதமானது எனவும் அழைக்க இயலும்?’ என பூஷண் கேள்வி எழுப்புகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக