புதன், அக்டோபர் 12, 2011

புனித பயணிகள் வருகையால் மக்காவில் மக்கள் வெள்ளம்


வெளிநாடுகளிலிருந்து கூடுதலான புனித பயணிகள் வருகை தந்ததன் மூலம் மக்காவில் மக்கள் வெள்ளம் அதிகரித்துள்ளது.
 நேரடியாக மதீனாவிற்கு வருகை தந்த ஹாஜிகள் அங்கே தங்களது பயணத்தை முடித்துவிட்டு சனிக்கிழமை முதல் மக்காவை நோக்கி பயணிக்க துவங்கியுள்ளனர்.

இந்தியர்கள் உள்பட ஏராளமான ஹாஜிகள் கடந்த நான்கு தினங்களாக மக்காவிற்கு வருகைத் தந்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களில் 8 ஆயிரம் ஹாஜிகள் மதீனாவிலிருந்து வந்ததாக ஹஜ் மிஷன் அறிவித்துள்ளது. தனியார் நிறுவனங்களில் வந்த ஹாஜிகளும் மக்காவிற்கு வந்துள்ளனர். வரும் நாட்களில் ஹாஜிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

இதுவரை 47,051 ஹாஜிகள் வருகைத் தந்துள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. 11,218 ஹாஜிகள் மக்காவிலும், 35,833 பேர் மதீனாவிற்கும் வந்துள்ளனர். டெல்லியிலிருந்து அதிகமான ஹாஜிகள்(15,484 பேர்) வந்துள்ளனர். கோழிக்கோட்டிலிருந்து 25 விமானங்கள் மூலமாக 7,200 ஹாஜிகள் வருகைத் தந்துள்ளனர்

கருத்துகள் இல்லை: