செவ்வாய், அக்டோபர் 11, 2011

பழுதடைந்த பாலம் சீரமைப்பு: மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ. நடவடிக்கை

சிதம்பரம் அருகே பழுதடைந்த கொள்ளிடம் பாலம், சட்டப்பேரவை உறுப்பினர் முயற்சியால் சீரமைக்கப்பட்டது.



சிதம்பரம் அருகே உள்ள பழைய கொள்ளிடம் பாலம் குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதுகுறித்து அப்பகுதியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனிடம் முறையிட்டனர்.


இதையடுத்து, கே.பாலகிருஷ்ணன் அப்பாலத்தை ஞாயிற்றுக்கிழமை  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


பின்னர் அங்கிருந்தே செல்போன் மூலம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு பாலத்தை தற்காலிகமாவது சரி செய்ய
வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


அதன்படி, அன்றைய தினமே நெடுஞ்சாலைத்துறையினர் பாலத்தில் கற்கள் மற்றும் செம்மண் கொட்டி மேடு, பள்ளங்களை சரி செய்து உடனடியாக சீரமைத்தனர். பழைய கொள்ளிடம் பாலம் மிகவும் பழமை வாய்ந்தது. பழுதடைந்துள்ள இப்பாலம் துண்டிக்கப்பட்டால் வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாகனங்கள் 100 கி.மீட்டர் தூரம் சுற்றி செல்லும் நிலை ஏற்படும்.


எனவே இங்கு புதிய பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை: