உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற இன்னும் 9 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், பரங்கிப்பேட்டையில் பேரூராட்சி மன்றத்திற்கான தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. அ.இ.அ.தி.மு.க.வின் பேரூராட்சி வேட்பாளர் மன்ற மன்ற உறுப்பினர் வேட்பாளர்களை ஆதரித்து சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் பரங்கிப்பேட்டையில் வீடு வீடாக சென்று அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்.
வீடுவீடாக பெண்களை சந்தித்து கைகள் பிடித்து நலம் விசாரித்து, பின்பு அ.இ.அ.தி.மு.க.விற்கு வாக்கு சேகரிக்கிறார். சில பல வீடுகளில் அமர்ந்து அவர்கள் தரும் டீ,காபியையும் அருந்தி விட்டுச் செல்கிறார். ஏழை குடிசை வீடாக இருந்தாலும், இதுபற்றி அமைச்சரிடம் கேட்ட போது, எனது சகோதரிகளை நீண்ட நாட்கள் கழித்து சந்தித்து பேச இப்போதுதான் தருணம் கிடைத்துள்ளது. எனவே, அவர்களின் அன்பான உபசரிப்பை மனப்பூர்வமாக ஏற்கிறேன் என்றார்.
Source: Mypno

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக