மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கு போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்களை எதிர்த்து அக்கட்சியினரே சுயேட்சையாக போட்டியிடுகின்றனர்.
நெல்லிக்குப்பம் நகரமன்ற தலைவர் பதவிக்கு தி.மு.க., சார்பில் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலர் புகழேந்தி போட்டியிடுகிறார். தி.மு.க., முன்னாள் நகர செயலர் பழனிவேல் கட்சியில் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிடுகிறார். மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சித் தலைவருக்கு தி.மு.க., சார்பில் சிட்டிங் தலைவர் ஜெயமூர்த்தி போட்டியிடுகிறார்.
தி.மு.க., சிட்டிங் கவுன்சிலர் மணிவண்ணன் கட்சியில் சீட் கிடைக்காததால் சுயேட்சையாக போட்டியிடுகிறார். கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து அக்கட்சியினரே சுயேட்சையாக போட்டியிடுவதால் நெல்லிக்குப்பம் நகராட்சியிலும், மேல்பட்டாம்பாக்கம் பேரூராட்சியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக