பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான பால் விலையை உயர்த்துவதாக தமிழக அரசு கடந்த 17.11.2011 அன்று அறிவித்தது.
இதன்படி முற்றிலும் கொழுப்பு சத்து நீக்கப்பட்டு, நீல நிறப் பாக்கெட்டில் கிடைக்கும் ஆவின் பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.17.75 காசிலிருந்து 24 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிற பாக்கெட்டில் கிடைக்கும் பாலின் விலை ரூ.28ல் இருந்து ரூ.34ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பச்சை நிற பாக்கெட்டில் கிடைக்கும் பாலின் விலை லிட்டருக்கு ரூ.26ல் இருந்து ரூ.31ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், 50 பைசா, ஒரு ரூபாய் என்றால் கூட கஷ்டம் தான். ஆனால் ஒரு லிட்டருக்கு தற்போது 6 ரூபாய் 25 காசுகள் என்பது, ஏழைபாழைகள் முதல் பணக்கார வர்க்கத்தினர் வரையும் கஷ்டம் தான் என்கின்றனர்.
பால் விலையை தொடரந்து டீக்கடைகளில் டீ மற்றும் காபி விலைகள் அதிகரிக்கும் என வாடிக்கையாளர்களும், டீக்கடை உரிமையாளர்களும் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள டீக்கடை ஒன்றின் உரிமையாளர் ஒருவரிடம் நாம் கேட்டபோது, ஒரு டீயின் விலை 5 ரூபாயிலிருந்து 6 ரூபாய்க்கு உயர்த்தப்போகிறேன், காபி விலையை 7 ரூபாய் என கூட்டப்போகிறேன் என்றவர், இதற்கு மேல் கூட்டினால் டீக்குடிக்க வருவாங்களா என்று பயமாகவும் இருக்கிறது என்றார். அதே ராயப்பேட்டையில் மற்றொரு டீக்கடை உரிமையாளர் ஒருவரிடம் கேட்டபோது, நாங்கள் ஏற்கனவே கட்டுப்படியாகவில்லை என்று ஒரு டீ 6 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருக்கிறோம். தற்போது அரசு பால் விலையை உயர்த்திவிட்டதால், நாங்களும் வேறு வழியின்றி 7 ரூபாய்க்கு விற்றப்போகிறோம் என்றார்.
இது ஒரு பக்கம் இருக்க, டீ விலை உயரப்போகுது என்று தெரிந்த அடித்தட்டு மக்கள், வேலை கலைப்பு தெளிய நாள் ஒன்றுக்கு 4, 5 டீ குடிப்போம். ஆனால் இப்போது கணக்கு பார்த்தால், டீக்காக 30 ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று குமுறுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக