பழிஅஞ்சிப், பாத்துஊண் உடைத்து ஆயின், வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
அல்லா ரசூலுக்கு பயந்து, ஹலாலான வழியிலே, வூட்டு மனுசருவோ, சொந்தக்காரஹ, இஹலுக்கு பவுந்து உண்ணுரஹலோட பரம்பரை என்னிக்குமே அழியாது.
சம்பாதிச்சு
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
வூட்டுக்கார உம்மனைக்கூட ஒத்துமையா, ஜதப்பா குடும்பம் நடத்துற சாலிஹான சீதேவி மனுசரு, மனுசருலே சேத்தியில்லே. மலாயக்கத்துமாருவ மாதிரின்னு வச்சுக்குங்களேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக