செவ்வாய், நவம்பர் 15, 2011

‘என்னை கொல்ல முயற்சி’ – செய்யத் அலிஷா கிலானி

பாதுகாப்பு படையினர் கஷ்மீரில் மீண்டும் மோதலை உருவாக்க முயலுவதாக தெஹ்ரீ-இ-ஹுர்ரியத்
 கட்சியின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி குற்றம் சாட்டியுள்ளார்.

அமைதியாக நடைபெறும் பொதுக்கூட்டங்களை சீர்குலைக்க முயலும் ராணுவம் தனது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கிலானி தெரிவித்தார்.

கடந்த வாரம் சோப்பாரில் நடத்திய அமைதியான பேணியின்போது தனது ஆதரவாளர்கள் ஆயுதமேந்திய ராணுவ வீரனை பிடித்த சம்பவத்தில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆயுதப் படையை சார்ந்த ராணுவ வீரனை பேரணிக்கு அனுப்பியதன் பின்னணியில் ராணுவத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும். இச்சம்பவத்தின் பின்னணியில் சதித்திட்டம் உள்ளது. ராணுவத்தின் ரகசிய புலனாய்வு பிரிவைச் சார்ந்தவர் என ராணுவம் கூறுகிறது. ஆனால், தனது உரையை பதிவுச்செய்ய வந்தவர் என போலீஸ் கூறுகிறது. இவர்களுடைய வாதங்களில் வேறுபாடு உள்ளது.

துப்பாக்கியுடன் ராணுவ வீரன் ஏன் பேரணியில் கலந்துகொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தவேண்டும். தன்னை கொலைச் செய்யவோ அல்லது பேரணியில் துப்பாக்கியால் சுட்டு மோதலை உருவாக்கும் திட்டத்திலோ ராணுவ வீரன் பேரணியில் கலந்துக கொண்டிருக்கலாம். இவ்வாறு கிலானி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: