செவ்வாய், நவம்பர் 15, 2011

சிதம்பரத்தில் அதிகரித்து வரும் குரங்குகளால் வியாபாரிகள் அவதி

 சிதம்பரம் நகரில் குரங்குகள் செய்யும் தொல்லையால் வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 
சிதம்பரம் நகரில் குரங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.  குறிப்பாக நடராஜர் கோயில் வளாகத்தில் உள்ள தோட்டங்களில் இந்த குரங்குகள் நிரந்தரமாக வசித்து வருகின்றன.
நகரில் நான்கு வீதிகளில் உள்ள பழக்கடை, காய்கறி கடை உள்ளிட்ட வியாபாரிகள், பகல் வேளையில் குரங்குகள் தொல்லையால் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 
குரங்குகள் கூட்டம், கூட்டமாக வந்து வாழைப்பழம் உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறி, மளிகைப் பொருள்களை எடுத்துச் செல்வதால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ÷இதே போன்று, வீடுகளுக்காக வெளியே போடப்படும் பால் பாக்கெட்டுகளை போட்ட சில நிமிடங்களில் குரங்குகள் எடுத்துச் சென்றுவிடுகின்றன.
 
பல வீடுகளில் ஜன்னல் மற்றும் வாசல் வழியாக வீட்டுக்குள் புகுந்து பொருள்களை எடுத்துச் சென்றுவிடுகின்றன.
 
காலை வேளையில் காய்கறி வாங்கி செல்பவர்களை துரத்திச் சென்று காய்கறி பையை பிடுங்கி செல்கின்றன.
 
குரங்குகள் தொல்லையால் சிதம்பரம் நகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
 
எனவே சிதம்பரம் நகராட்சி நிர்வாகம் வனத்துறை மூலம் மேற்கண்ட குரங்குகளைப் பிடித்து அருகில் உள்ள கல்வராயன்மலை பகுதியில் கொண்டு விட வேண்டும் என நகர மக்களும், வியாபாரிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: