காதல் மனைவியை ஏமாற்றி, இரண்டாவது திருமணம் செய்ய முயன்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சிப்காட் பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி, 28. இவர் சென்னை, பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தார். அப்போது அதே கல்லூரியில் படித்த அம்பத்தூர், மேனாம்பேடு பகுதியைச் சேர்ந்த மகேஸ்வரியுடன், 26, பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்தனர். கடந்தாண்டு சென்னை கோவிலில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தனர்.
அதனைத் தொடர்ந்து மூர்த்தி, தனது பெற்றோர் சம்மதத்துடன் மீண்டும் திருமணம் செய்து கொள்வதாக மகேஸ்வரியிடம் கூறி தாலியை பெற்றுக் கொண்டார். இந்நிலையில் மூர்த்திக்கு அவரது பெற்றோர் வேறொரு பெண்ணுடன் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்தனர். இதனையறிந்த மகேஸ்வரி, மூர்த்தியிடம் சென்று தன்னை மீண்டும் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். இதற்கு மூர்த்தி மறுத்து விட்டார்.
இதுகுறித்து கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து மூர்த்தியை தேடி வருகின்றனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக