உலகின் முன்னனி நிறுவனங்களின் முதலீட்டாளரும் சவுதி இளவரசரும் பில்லியனருமான அல்வலீத் பின் தலாலின் நிறுவனம் உலகின்
முன்னனி சமூக வலைதளமான டிவிட்டரின் 300 மில்லியன் மதிப்புள்ள பங்குகளை வாங்கியதாக தகவல் வெளியிட்டுள்ளது.
சவுதி மன்னரின் மருமகனாகிய இவருக்கு 20 பில்லியன் சொத்து மதிப்பு இருப்பதாகவும் நியூஸ் கார்ப்பரேசனின் 7 ஏழு சதவீத பங்குகளும் மேலும் ஒரு செய்தி தொலைக்காட்சி ஒன்றும் ஆரம்பிக்க இருப்பதாகவும் கடந்த மார்ச் மாதம் போபர்ஸ் இதழ் ஒன்று இவரை பற்றி தகவல் வெளியிட்டுள்ளது.
அல்வலீதின் நிறுவனமும் சவுதி அரசும் இணைந்து டிவிட்டரின் 8 பில்லியன் மதிப்பில் மேலும் 3.75 சதவீத பங்குகளை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் என அறிவித்துள்ளனர்.
சமூக வலைதளமான டிவிட்டர் 140 வார்த்தைகள் வரை மக்கள் பகிரவும் டிவிட் செய்யவும் குழுமத்தை உருவாக்கவும் ஒருவரை பின் தொடரவும் அனுமதிக்கிறது ஒரு மாதத்திற்கு 100 மில்லியன் பயனர்கள் இச்சேவையை டிவிட்டர் வாயிலாக பயன்படுத்துகிறார்கள்.
மேலும் பேஸ்புக் மற்றும் ஜிங்கா இணைய சமூக வலைதளங்களில் சிறந்து விளங்குகிறது உலகின் மிகப்பெரிய சமூகவலைதளமான பேஸ்புக் 750 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களையும் பதிவுகளையும் கொண்டுள்ளது.
இணைய தேடல் நிறுவனமான கூகிள் நிறுவனமும் சமீபத்தில் கூகிள்+ என்ற பெயரில் தொடங்கியுள்ளது இதுவும் டிவிட்டரின் வாடிக்கையாளர்களை அதிகமாக கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக