சனி, டிசம்பர் 24, 2011

மாயமான சிறுமியை மீட்டார் பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட்

கடலூரில் காணாமல் போன சிறுமியை பெரம்பலூர் அருகே மாஜிஸ்திரேட் மீட்டார்.

 கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் ராமலிங்கம்.
இவரது மகள் சவுமியா, 7. இவரை கடந்த இரண்டு வாரங்களாக காண வில்லை. இதுகுறித்து ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில் பரங்கிப்பேட்டை மாஜிஸ்திரேட் கோமதி திருச்சி சென்று திரும்பி வரும் வழியில் பெரம்பலூர் அருகே ஒரு சிறுமி தனியாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்து அழைத்து வந்து தனது வீட்டில் வைத்திருந்தார்.

விசாரணையில், அவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் என்றும், தனது தந்தையின் பெயர் ராமலிங்கம் என்றும் தெரிய வந்தது. அதையடுத்து நேற்று திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாஜிஸ்திரேட் கோமதி தகவல் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: