பெங்களூர் அருகே 9 மாத கைக்குழந்தையை பாலில் விஷம் கலந்து கொடுத்து கொன்று விட்டு, தானும் விஷம் குடித்து தாய் தற்கொலை செய்து கொண்டாள். கள்ளத்தொடர்பால்
இந்த விபரீதம் சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.
இந்த விபரீதம் சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது.
பெங்களூர் அருகே கிராமபுற பகுதியான ராஜனகுன்டே போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சாதனஹள்ளியில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணா. இவருடைய மனைவி பவித்ரா(வயது 25).
இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்து, 9 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருந்தது.
நேற்று முன்தினம் ராமகிருஷ்ணா தன்னுடைய உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த பவித்ரா திடீரென்று தனது 9 மாத குழந்தைக்கு பாலில் விஷம் கலந்து கொடுத்தார். அதை குடித்த குழந்தை சிறிது நேரத்தில் இறந்து விட்டது. அதன்பிறகு பவித்ராவும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், உறவினர் வீட்டில் இருந்து திரும்பி வந்த ராமகிருஷ்ணா, தனது மனைவி, குழந்தை பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பவித்ரா, குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். பவித்ராவிற்கும், வேறு நபருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயம் ராமகிருஷ்ணாவிற்கு தெரியவந்தது.
பவித்ராவிடம் கள்ளத்தொடர்பு பற்றி ராமகிருஷ்ணா கேட்டதால், அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தாக தெரிகிறது. இதன் காரணமாக குழந்தையை கொன்று விட்டு, பவித்ரா தற்கொலை செய்திருப்பதும் தெரியவந்து உள்ளது. இதுகுறித்த புகாரின் பேரில் ராஜனகுன்டே போலீசார் வழக்கு பதிவு செய்து கொண்டனர். மேலும் ராமகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக