விடுமுறை தினத்தில் பள்ளிக்கு வந்து மொட்டை மாடியில் வைத்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்து, அந்த காட்சியை செல்போன்
மூலம் பரப்பிய 5 மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி அருகே பாதிரிவேடு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள இப்பள்ளியில் பாதிரிவேடு கிராமத்தை சுற்றியுள்ள ஈகுவார்பாளையம், நேமலூர், பல்லவாடா, மாதர்பாக்கம், செதில்பாக்கம் உட்பட 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 2 ஆயிரம் மாணவ & மாணவிகள் படிக்கின்றனர்.
பள்ளியில் போதுமான கழிவறை வசதி உட்பட எந்த அடிப்படை வசதியும் இல்லை. வகுப்பு முடிந்த பிறகு பள்ளியை பூட்டுவதும் இல்லை. பள்ளிக்கு வாட்ச்மேனும் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம் இருந்தும், அது செயல்படவில்லை.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு பொதுவிடுமுறை. அன்று மாணவ, மாணவிகளோ ஆசிரிய ர்களோ அல்லது அலுவலக ஊழியர்களோ பணிக்கு வரவில்லை.
ஆனால் பிளஸ் 2 படிக்கும் 5 மாணவர்கள், பிளஸ் 1 படிக்கும் 2 மாணவிகள் வந்தனர்.
பள்ளியின் மொட்டை மாடிக்கு சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த காட்சியை செல்போனில் பதிவு செய்து கொண்டனர்.
பின்னர் அந்த காட்சிகளை புளூத்டூத் மூலம் சக மாணவ & மாணவிகளின் செல்போன்களுக்கும் பரப்பியுள்ளனர். இதை பார்த்த அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பள்ளி நிர்வாகத்துக்கு ஆதாரத்துடன் தகவல் தெரிவித்தனர்.
உடனே பள்ளி நிர்வாகம் அந்த 5 மாணவர்களுக்கும் மாற்று சான்றிதழ் (டிசி) கொடுத்து பள்ளியை விட்டு வெளியேற்றியது.
இந்நிலையில் நேற்று காலை நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பள்ளி முன்பு கூடினர். பள்ளி நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். அத்துடன் இந்த விவகாரத்தில் தொடர்புடைய 2 மாணவிகளையும் உடனே பள்ளியில் இருந்து நீக்க வேண்டும். பெற்றோர் ஆசிரியர் கழகத்தை கூட்ட வேண்டும். காவலாளியை நியமிக்க வேண்டும். பள்ளி முடிந்ததும் வகுப்பறைகளை பூட்ட வேண்டும் என்பது பல்வேறு கோரிக்கை வைத்து அவர்கள் கோஷமிட்டனர்.
தகவல் அறிந்ததும் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி ராமச்சந்திரன், ஊராட்சி தலைவர்கள் நேமலூர் மாலா சேகர், மாதர்பாக்கம் பல்லவி ரமேஷ், மாநெல்லுர் கோபி, கும்மிடிப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்மேத்தா, சப் இன்ஸ்பெக்டர்கள் ராமு, சுப்பிரமணி ஆகியோர் பள்ளிக்கு வந்தனர்.
அப்போது பள்ளி நிர்வாகத்திடம் பேசிய அவர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளின்போது மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும். என்பது உட்பட பல அறிவுரை வழங்கினர். இதை பள்ளி நிர்வாகம் ஏற்ற பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக